எனதருமை நண்பர் தமிழன் வேணு எழுதிய கொன்றை வேந்தன் 2008
------------------------------------------------------------------
கொன்றைவேந்தன்-2008
------------------------------------
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு
ஆலய வாசலில் தாவணி பாரு
இங்கிலீஷிலே எப்பவும் பேசு
ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு
உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி
ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி
எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு
ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை
ஐ லவ் யூவென சொல்லிப் பழகு
ஒவ்வொருநாளும் சட்டை மாற்று!
ஓஹோவென்று ஃபிகரைப் புகழ்
ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள்
அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை
கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
காசில்லார்க்குக் காதலி இல்லை
கிண்டல் செய்வது மாணவர்க்கழகு
கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு
குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு
கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு
கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை
கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு
கைபேசி மாடலை அடிக்கடி மாற்று
கொஞ்சம் கொஞ்சம் தமிழிலும் பேசு
கோபம் வந்தால் வீட்டிலே காட்டு
கௌபாய் போல ஊரை சுற்று
சத்யம் தியேட்டர் சாலவும் நன்று
சாகிறவரைக்கும் மொக்கை போடு
சிகரெட் பிடித்தால் மறைந்து ஊது
சீறும் பல்சரை தினசரி ஓட்டு
சும்மாயிருந்தால் கவிதை எழுது
சூடும் சொரணையும் காதலர்க்கில்லை
செல்போன் ரிங்டோன் அடிக்கடி மாற்று
சேரும் நண்பர்கள் ஜேப்பைக் கவனி
சைட்டடிப்பதற்கு கூலிங்-கிளாஸ் போடு
சொட்டைத்தலையில் தொப்பியை அணி
சோதாநண்பர்கள் உடன்வரும் சனி
தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை
தாய் ரிமோட் எடுத்தால் நெடுந்தொடர் தொல்லை
திரைப்படப்பாட்டைத் தினசரி ஓது
தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
துட்டுள்ளவரை தான் உடன்வரும் நட்பு
தூக்கம் வரும்வரை எஃப்.எம்.கேளு
தெளிவுடையோரைத் தூர விலக்கு
தேடிப்போனால் பாட்டியும் முறைப்பாள்
தைத்ததை விடவும் ரெடிமேட் நன்று
தொலைந்த செல்போன் திரும்ப வராது
தோழனுடன்போய் ஜொள்ளுதல் தீது
நமீதா நாமம் நயம்பட உரை
நான்கில் ஒரு ஃபிகர் நிச்சயம் தேறும்
நித்தம் செல்லை டாப்-அப் பண்ணு
நீள எஸ்.எம்.எஸ். அனுப்புதல் தவிர்
நுரைவரும் பீரை வெயிலில் பருகு
நூல்விடாமல் ஃபிகர் கிடைக்காது
நெட்டை ஃபிகரும் ஒட்டடைக்கு உதவும்
நேரம் கிடைத்தால் பாடமும் படி
நையப்புடைப்பது அப்பா கடமை
நொண்டிச்சாக்கு தினசரி புகல்
நோட்டில்லேன்னா கேட்டுக்கு வெளியே!
படங்கள் தனியாய்ப் பார்ப்பது பாவம்
பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து
பில்லியன் சீட்டிற்கு ஃபிகரே பெருமை
பீஸைத் தின்றால் ஹால்-டிக்கெட் இல்லை
புத்தகம் இருப்பது ஃபோட்டோ வைக்க
பூசை என்பது தண்ணியடித்தல்
பெண்கள் காலேஜ் புண்ணியதீர்த்தம்
பேசிக்கொல்வது பெண்டிர் இயல்பு
பையனைப் போலே பல்லைக்காட்டாதே
பொதுவிடம் என்றால் முதுகில் கவனம் வை
போன செமஸ்டர் திரும்ப வராது
மன்மதக்குஞ்சு நீயென்றுணர்
மாமிகள் நட்பு ஆபத்துக்குதவும்
மிஞ்சும் பெண்ணிடம் கெஞ்சுதல் நன்று
மீட்டர் இல்லா ஆட்டோ காதல்
முற்பகல் காட்சியை முதல்நாள் பாரு
மூன்றாண்டில் டிகிரி முடிப்பவன் மேதை
மென்ட்டல் என்பவன் தினசரி படிப்பவன்
மேட்னி போகக் கூட்டணி சேரு
மையிடும் பெண்கள் பழையபஞ்சங்கம்
மொறைக்கிற பெண்ணைத் துரத்துதல் தவிர்
மோட்சம் அளிப்பது ஃபிகரின் புன்னகை
வண்டியிருப்பது ஊர் சுற்ற உதவும்
வாட்டமளிப்பது கோடை விடுமுறை
விடாமல் தொடரும் வித்தையில் தேறு!
வீட்டுக்குப் போனால் விழுந்திடும் உதை
உடான்ஸ் விடுகையில் கவனம் தேவை
ஊக்கம் தருவது ஓரக்கண் பார்வை
வெட்டிப்பொழுதில் வெளியே திரி
வேஸ்ட் எனப்படுவது ஃபிகர்களில் இல்லை
வைதிடும் பெண்ணைக் கைதொழுதிடு
ஒரு ஃபிகர் இருக்க மறு ஃபிகர் தவிர்
ஓட்டைவாய்நண்பனை ஒதுக்கிடல் நன்று
---------------------------------------------------
Friday, January 16, 2009
பெற்றோர்கள் மன்னிக்கவும்
Posted by
cheena (சீனா)
at
4:54 PM
Labels: கொன்றைவேந்தன், தமிழன்வேணு, நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
நகச்சுவையா - நகைச்சுவையா - பசங்க எல்லாம் படிங்கப்பா - பெர்சுங்க எல்லாம் ஒதுங்குங்கப்பா
அடடா... அடடா.. அடடடடடடா... கலக்கிட்டாரு உங்க நண்பரு...
நகலெடுத்து கதவிலே ஒட்டவைக்க வேண்டியதுதான்... ஹிஹி...
நல்ல வேளை ஐயா... நான் படிச்சிட்டேன்.. இல்லேன்னா பெருசுங்கன்னு சொல்லியிருப்பாய்ங்க.... அவ்வ்வ்..
ஹாய் - ச்சின்னப்பையன் தானே நீங்க - அரை டவுசர் போட்டுட்டுத்தானே வந்தீங்க
ஹி..ஹி..ஜூப்பரு!
இதெல்லாம் வேறயா? :))))))
நான் ஒதுங்கிட்டேனுங்க .....
நல்லா யோசிச்சிருக்காரு உங்க நண்பர்
வாங்க சுரேகா - வருகைக்கு நன்றி - ஜூப்பரா = ரசிச்சீங்களா - பலே பலே
வாங்க தருமி அண்ணே ! ஒதுங்கிட்டீங்களா !! ஏன்ணே ! உங்களுக்கு ஸ்பெஷல் அனுமதி உண்டே !
வணக்கமுங்கோ சின்ன அம்மிணீ - வந்ததுக்கு நன்றிங்கோ !
ஒதுங்கீட்டேன்.....!
அன்புச் சகோதரி நானானி
ச்ச்ச்சும்மா ஜாலிக்கு - கோச்சுக்காதீங்க
ஒதுங்காதீங்க
அன்பின் சீனா ஐயா... வலைப்பூங்கா சூப்பரோ சூப்பர்...
பார்த்துக்கொண்டேயும் இருக்கலாம்.. படித்துகொண்டேயும் இருக்கலாம்... அப்படி ஒரு அழகான வார்த்தைகளின் தோட்டம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது வணக்கமுடன் பாலகன் இளங்கோவன், அமீரகம்.
ஹாய் ஹாய் - பாலகனா நீ - நீயெல்லாம் இதப் படிச்சுக் கெட்டுப் போய்டாதெ ! ஹா ஹா
நன்றி இளங்கோ வருகைக்கு
நானும் ஜாலியாகத்தான் ஒதுங்கீட்டேன்...சீனா!!
அதானே - அக்காவாவது என் பதிவப் படிக்காம ஒதுங்கறதாவுது - நன்னி நானானி அக்கா
சூப்பருப்பு! இவருக்கு கவிமாமணி விருதே தரலாம்!
வாங்க அன்பு மணி - கொடுத்துடுவோம் - விருது
நடிகரும் எழுத்தாளருமான தமிழன் வேணு அய்யா நகைச்சுவையுடன் கருத்தையும் அழகாக பாடல்கள்.
குழுமங்களில் மிகப்பிரபலம்.
ஒரு சேர வாசித்ததில் மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
;-)சூப்பர் தலைவா நல்லா சிரிச்சு ரசித்தேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்
super a iruku i want to be ur follower but there is no follower widget
வை விடாமல் விலாவாரியாக வாசித்தேன்.வாசித்தால்தானே தெரியும் இளசுகளின் வண்டவாளங்கள்.அவற்றை தண்டவாளத்தில் ஏற்றிய சீனாவுக்கு ஒரு ஓ போடு...
வை விடாமல் விலாவாரியாக வாசித்தேன்.வாசித்தால்தானே தெரியும் இளசுகளின் வண்டவாளங்கள்.அவற்றை தண்டவாளத்தில் ஏற்றிய சீனாவுக்கு ஒரு ஓ போடு...
ஒரு வரிவிடாமல் விலாவாரியாக வாசித்தேன் ,வாசித்தால்தானே தெரியும் இளசுகளின் வண்டவாளங்கள்.அவைகளை தண்டவாளத்தில் ஏற்றிய சீனாவுக்கு ஒரு மெகா ஓ போடு..
பின் தொடர வேண்டுமா - ஏற்பாடு பண்ணிடறேன்
வாங்க கோமா - மூணு பின்னூட்டமா
நல்லா இருக்கு உங்க "ஓஓஓ"
நன்றி கோமா - வருகைக்கும் கருத்துக்கும்
அது என்ன ஆச்சுன்னா சீனா
முதல் க்ளிக்கில் பின்னூட்டத்தில் நாலைந்து எழுத்து மிஸ்ஸிங்....அடடான்னு மறு ஊட்டம் போட்டால் அப்பவும் டிட்டோ
அதான் 3 பின்னூட்டம்
புரிஞ்சுடுச்சு கோமா - எனக்கும் இத மாதிரி ஆயிருக்கு - ஆச்சா இல்லயான்ன்னு தெரியாமத் திரும்பத் திரும்ப போட்ட அனுபவம் உண்டு
யப்பா எங்க உங்க கைய காட்டுங்க, காலா நினைச்சு, சூப்பர் பாஸ், எனக்கும் ஒரு யூத் அட்ராக்சன் வந்துருச்சு. நல்லா இருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு
\\
தீனியைக் குறைத்தால் தொப்பை வராது
பாஸும் ஃபெயிலும் படிப்பதைப் பொறுத்து\\
என்பது போன்ற சில நல்ல தகவல்களும் உள்ளன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புகழன்
ஒரே தமாசு..!
அருமை சீனா..
//கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து
தந்தைபர்ஸ் மிக்க ஏ.டி.எம்.இல்லை//
அருமை :)
அன்பின் சமுத்ரா
15 மாதம் கழித்துத் தேடிப் பிடிச்சு, படிச்சு மறுமொழி இட்டமைக்கு நன்றி
அப்பப்பா!
எல்லா உண்மையயும் சொல்லிட்டாங்கப்பா....
lateral thinking..
ஐயா ஜூப்பரு
Super:)))))
super
ayyaa kavingkare... vaalththukkal..
Post a Comment