Monday, January 7, 2008

இறைவன் துணைவனா ??

பாதச்சுவடுகள் அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந் தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன். எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன. ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது. எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல் மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.

ஓ! இதென்ன? எனது பாதச் சுவடுகளின் அருகில் யாருடையவை இம் மற்றொரு ஜோடி சுவடுகள்? உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை! என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.

ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்? அதுவும் என் வாழ்க்கையின் மிகவும் சோதனையான காலங்களின் போது....எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை. தேவா, இவ்வளவு தான் உன் கருணையா? உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது கை விட்டு விட்டாயே என்னை - கூக்குரலிட்டேன் நான்.

அசரிரீயாக பதில் கேட்டது- அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள் உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை. நடக்கவியலாத உன்னை நான் சுமந்து வந்த சுவடுகள்!.


N.Ganeshan - இணையத்தில் தமிழ் வலைப்பூவில் இருந்து
http://enganeshan.blogspot.com/

இது அவர் படித்ததில் அவருக்குப் பிடித்தது
அதை நான் படித்ததில் எனக்குப் பிடித்தது