Monday, February 18, 2008

பேசும் யானை

அன்புடன் குழுமத்தில், அன்பர் புகாரி அறிமுகப் படுத்திய, தமிழோவியத்தில் பிரசுரமான, ஜான்.பீ.பெனடிக்ட்டின் கவிதை ஒன்று இங்கே :
------------------------------------------------------------------------------------------
பெரிசா எங்களைப் படைச்சதால
பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான்
பேச முடியா ஊன ஜாதியை
பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்

முழங் கையளவு குச்சியை வைச்சு
முட்டிக்கு முட்டி தட்டுறிய
மூனு மாசத்துக் கொருமுறை தான்
முதுகில தண்ணீ ஊத்துறிய

கால் நகர முடியாம
கட்டிப் போட்டு வாட்டுறிய
கட்டுக்கட்டா கரும்பு திங்கும்

கம்பீரக் கூட்டம் நாங்க
காய்ஞ்சு போன தட்டையை
கால் வயிற்றுக்குப் போடுறிய

என்னைப் பெத்த மவராசி
எந்தக் கோயில் வாசலிலோ
என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க

வருஷத்துல ஒருமாசம் முதுமலை கேம்ப்
வாஸ்து பொலிட்டிசியன் போட்ட பிச்சை
வருஷம் முழுக்க காட்டுக்குள்ளே கூட்டமா
வாழ்வது தானே எங்க ஜனத்தின் ஆசை

வாய் பேச முடிஞ்சதால
வந்தேன் ஜார்ஜ் கோட்டைக்கு
வனத்துறை மந்திரியைப் பாத்து
வயிற்றெரிச்சலைக் கொட்டிப் போட
--------------------------------------------
நன்றி: தமிழோவியம்
நன்றி : அன்புடன் புகாரி

நன்றி : ஜான்.பீ.பெனடிக்ட்