Sunday, October 12, 2008

பிள்ளையார் சுழி

தஞ்சாவூர்க் கவிராயர் என்றொரு தனிச்சுற்றுக்கான காலாண்டிதழில் வெளி வந்த இரு கவிதைகள்.

பிள்ளையார் சுழி :
-------------------------

ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை
ஒரு ஆண்பிள்ளையாய்
நடத்தக்கூடாதா ?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என்பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ !

எச்சம் :
----------
சிலைகள் தோறும்
காக்கையின் எச்சம்.
வள்ளுவர் சொன்னது
சரி.
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தாற்
காணப்படும் !

நன்றி : தினமணி - தமிழ் மணி - 12.10.2008



7 comments:

cheena (சீனா) said...

உங்களுக்கும் பிடித்தால் மறுமொழி இடுங்களேன்

Thamiz Priyan said...

இரண்டும் கலக்கல் ஹைக்கூக்கள் போல... ;)

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்பிரியன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு. அன்பின் சீனா அவர்களுக்கு,

இன்றுதான் தங்களின் வலைத்தளம் எல்லாவற்றையும் பார்க்க நேரிட்டது.
அதுவும் நீங்கள் என் பதிவுகளுக்கு பின்னூட்டமளித்த பின்பு.

மிக அழகாய் இருக்கிறது. இப்படித்தான் படிக்கும் போது நிறைய விசயங்கள் நம்மளை அட போட வைக்கும்.

அவற்றையெல்லாம் நீங்கள் தொகுத்தளிப்பது மிக நல்ல முயற்சி.

மேலும், நீங்கள் என் வலைப்பதிவிற்கு வந்து என் ஒவ்வொரு பதிவிலும் பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி.

குரு ப்ரம்மா சொல்லிய பின் ஆமென் சொன்ன தங்களின் பேத்திக்கு எனது அன்பினைச் சொல்லிவிடுங்கள்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமித்து அம்மா

முல்லை அமுதன் said...

piramaatham
thodarka.
mullaiamuthan

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முல்லை அமுதன்