பாதச்சுவடுகள் அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந் தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன். எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன. ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது. எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல் மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.
ஓ! இதென்ன? எனது பாதச் சுவடுகளின் அருகில் யாருடையவை இம் மற்றொரு ஜோடி சுவடுகள்? உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை! என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.
ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்? அதுவும் என் வாழ்க்கையின் மிகவும் சோதனையான காலங்களின் போது....எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை. தேவா, இவ்வளவு தான் உன் கருணையா? உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது கை விட்டு விட்டாயே என்னை - கூக்குரலிட்டேன் நான்.
அசரிரீயாக பதில் கேட்டது- அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள் உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை. நடக்கவியலாத உன்னை நான் சுமந்து வந்த சுவடுகள்!.
N.Ganeshan - இணையத்தில் தமிழ் வலைப்பூவில் இருந்து
http://enganeshan.blogspot.com/
இது அவர் படித்ததில் அவருக்குப் பிடித்தது
அதை நான் படித்ததில் எனக்குப் பிடித்தது
Monday, January 7, 2008
இறைவன் துணைவனா ??
Posted by
cheena (சீனா)
at
9:01 AM
Labels: தமிழ் வலைப்பூக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சோதனை மறு மொழி ஒட்டம்
உண்மையிலேயே நல்ல கருத்து. இறைவன் நம்மைத் தூக்கிச் சென்றாலும் நமக்கு அது புரியாத காரணத்தால் நாம் தான் நடந்து செல்கிறோம் - இறைவனின் துணை இல்லை என நினைக்கிறோம்.
உண்மை ஐயா. நானும் படித்திருக்கிறேன் இதனை - ஆங்கிலத்திலும் தமிழிலும். தமிழில் நா.கணேசன் அவர்கள் வலைப்பதிவில் தான் படித்தேன் போல.
வருகைக்கு நன்றி குமரன். மூலம் எது தெரியவில்லை.
நல்ல சிந்தனை.
எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
இனி, jeeveesblog.blogspot.com -ல்
என்னைப் பார்க்கலாம்.
வருகைக்கு நன்றி ஜீவி - தங்களது வீட்டிற்கும் வருகிறேன்
இதை நானும் 'அங்கே' படித்தபோது ரொம்பவும் பிடித்திருந்தது.
நல்லவற்றை எங்கு படித்தாலும் எவருக்கும் பிடிக்கும் துளசி
நன்றாய் இருந்தது சீனா சார்..
நன்றாக இருந்ததினால் தான் இங்கு பதிந்தேன் - பாச மலர்
எனக்கும் பிடித்திருக்கிறது.
நவன் - இது எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் - வருகைக்கு நன்றி
பிடிக்காதா என்ன?
//
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள் உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை. நடக்கவியலாத உன்னை நான் சுமந்து வந்த சுவடுகள்!.
//
Classic
சிவா, வருகைக்கு நன்றி - இறைவன் என்றும் நம்முடன் இருக்கிறான் என எல்லோரும் உணர வேண்டும்.
நவன், பிடிக்கும் எல்லோருக்கும் நிச்சயம்
நல்ல கருத்தொன்றை பகிர்ந்திருக்கிறீர்கள். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இதனை நாம் உணர மறுக்கிறோம்.
நிர்ஷன், இது தான் பிரச்னையே - நமக்கு துணைவன் யார் எதிரி யார் என்பதே தெரியவில்லையே - புரிந்து கொள்ளும் திறமை நம்மிடம் குறைவு தான்
முன்னமே படித்திருந்தாலும் மறுபடி படிக்க வேண்டிய பதிவுதான். நன்றி சார்.
மதுரையம்பதி - எவ்வளவு தடவை வேண்டுமானாலும் படிக்கலாம் - படிக்க வேண்டும் - நினைவில் இருக்க வேண்டும்.
எனக்கும் பிடிச்சிது!!
ஐயா தருமி, எல்லோருக்கும் பிடிக்கணூம் - அவ்ளோ தான்
மிக அருமை,
உங்களுடன் பழக ஆசை!
Post a Comment