Sunday, October 21, 2007

புகாரியின் எழுத்துகள்

கவிதைக்குள் சொல்லைப் பார்ப்பவன் மனிதன்

சொல்லுக்குள் கவிதை பார்ப்பவன் கவிஞன்


நீ விளைத்த பழங்கள் நீ உண்ணமாட்டாய்

நீ உண்ணும் பழங்கள் நீ விளைவித்திருக்க மாட்டாய்

---------------------------------------------------------------------------------


புகாரி தன் சொந்த ஊரான தஞ்சை மாநகரம் பற்றி :

வானூறி மழை பொழியும்

வயலூறிக் கதிர் விளையும்

தேனூறி பூவசையும்

தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி

கவிபாடிக் கரையேறும்

பாலூறி நிலம் கூடப்

பசியாறும் தஞ்சாவூர்.
---------------------------------------------------------------------------------



6 comments:

ரசிகன் said...

// கவிதைக்குள் சொல்லைப் பார்ப்பவன் மனிதன்
சொல்லுக்குள் கவிதை பார்ப்பவன் கவிஞன//

அந்த ரெண்டையுமே ரசிப்பவன் இந்த ரசிகன்.ஹாஹா.. நல்லாயிருக்கு..புகாரியின் கவிதைகள்

cheena (சீனா) said...

நன்றி ரசிகரே !! வருகைக்கும் கருத்துக்கும்

சேதுக்கரசி said...

கவிஞர் புகாரியின் வலைத்தளம் பார்த்திருக்கீங்களா? அன்புடன் பக்கமும் வாங்க.

cheena (சீனா) said...

சேதுக்கரசி - தகவலுக்கு நன்றி - அன்புடன் - புகாரியின் வலைத்தளம் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறேன். இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும். செய்கிறேன்.

சேதுக்கரசி said...

மங்களூர் சிவா, இராமநாதன் வலைப்பூக்களில் உங்க பின்னூட்டத்தைப் பார்த்துதான் வந்தேன். உங்க மற்றுமொரு வலைப்பூவையும் பார்க்கிறேன்.

cheena (சீனா) said...

நன்றி சேதுக்கரசி - மெதுவாகப் பாருங்கள் - கருத்த்க் கூறுங்கள்