Wednesday, October 10, 2007

கவியரசின் அனுபவக் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்'
எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
-------------------------------------------------------------------------------
என்ன ஒரு அருமையான கவிதை - அனுபவம் என்பது எல்லோருக்கும் அமையாது. ஒன்றினை உணர வேண்டுமானால் அதுவாக மாற வேண்டும். அப்போதுதான் அதன் அருமை புரியும். கேள்வி ஞானம் மட்டும் போதாது. கவியரசின் தத்துவக் கவிதைகளில் - படித்ததில் பிடித்த கவிதை

13 comments:

வித்யா கலைவாணி said...

ஒரு அழகான கவிதையை இட்டதற்கு நன்றி. வைரமுத்துவின் கருவாச்சி காவியம் வாசித்துப் பாருங்கள். எங்களது கரிசல் காட்டு மண்ணின் வாசம் வரும். தமிழ் பல வழிகளிலும் பரிணமிப்பதே இதற்குக் காரணம்.

உண்மைத்தமிழன் said...

சீனாதானா.. எனக்கும் கவியரசரின் கவிதைகளில் மிகப் பிடித்தது இக்கவிதைதான்.. எனது வாழ்க்கையின் கூடவே பயணித்து வருகிறது இவ்வரிகள்.. வாழ்க கவியரசர்..

குமரன் (Kumaran) said...

மிக அருமையான கவிதை ஐயா.

மங்களூர் சிவா said...

//
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்'
எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
//
சூப்பரான வரிகள் இல்லையா!!

ரொம்ப லேட்டா வந்திட்டேனோ. இன்னைக்குதான் இதை நான் தமிழ்மணததுல பார்த்தேன்.

VSK said...

எனக்கு[ம்] மிகவும் பிடித்த கவிதையை இட்டமைக்கு மிக்க நன்றி.

ஒவ்வொரு வரியும் வைரவரிகள்!

:))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஎஸ்கே

Unknown said...

எனக்குப் பிடித்த கவிதை சீனா இது

கண்ணதாசனின் வலிமையே எளிமையான வார்த்தைகளுக்குள் வலிமையான கருத்துக்களைப் பொத்தி வைப்பதுதான்.

அற்புதக் கவிஞர். அவருக்கு அஞ்சலியாக நானெழுதிய கவிதையை நானே அடிக்கடி வாசிப்பது என் வழமை

cheena (சீனா) said...

அன்பின் புகாரி, வருகைக்கு நன்றி - இக்கவைதை எனக்கு மிகவும் படித்த பிடித்த கவிதை

Tech Shankar said...

கேட்டேன் கவிதை அருமை அன்பரே
படித்ததில் பிடித்தது.
கவிதை மட்டும் அல்ல உமது நட்பும்தான்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் நெஞ்சமே

கோகுலன் said...

அருமையான கவிதை..

வாழ்க்கையே கடவுள்.. அனுபவமே தெய்வம்..

அருமை சீனா..

cheena (சீனா) said...

கோகுலன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோகுலன்

cheena (சீனா) said...

கோகுலன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோகுலன்