Monday, October 15, 2007

தூரன் குணாவின் கவிதை - கணையாழி 2003



பூத்திருந்த காலம்



அன்றைய அந்திப்பொழுது


வீடு திரும்புதல்களில்


படிந்திருக்கும் அழுக்கு


புறத்தில் மட்டும்






விளையாட்டில் விட்டுக்கொண்ட


காய் எப்படியும்


பழுத்துவிடும் மறுநாள்






தூக்கிச் சொருகிய சேலையோடு


குளத்தில் வெளுத்த சலவைக்காரியின்


வெண் தொடைகளை விகல்பமின்றி பார்த்தது


சிறுநீரில் உயிரணுக்கள் கலவாத காலத்தில்






உள்ளம் போகும் தடத்தில்


உதைபந்தென இருந்த நாவு


இன்று சொற்களை தேர்கிறது


திறமையானதொரு சதுரங்க


ஆட்டக்காரனின் காய் நகர்த்தலாய்






பகிர்தலையும் புன்னகையையும்


புதைத்த இடத்தில்


மீந்த எலும்புத்துண்டுகளாய்


அவரவர் பால்யம்






(நன்றி: கணையாழி, 2003)
தூரன் குணா

8 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//விளையாட்டில் விட்டுக்கொண்ட


காய் எப்படியும்


பழுத்துவிடும் மறுநாள்//

rombavum rasiththeen!

cheena (சீனா) said...

நன்றி கவுதமன் !!

மற்ற பதிவுகளையும் படிங்களேன்

ரசிகன் said...

அப்பாடா...சீனா சாரோட எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் எழுதிட்டோமில்ல...
அப்பறம் சார்,நீங்க ரசிச்ச கவிதையில எல்லாம் ரொம்ப யதார்த்தமாயிருந்தாலும்.சில வார்த்தைகள் இப்புடி வெளிப்படையா இருக்கிறது தோழன்,தோழிகளோடு படிக்கும் போது தர்மசங்கடமாயிருந்தது.
தேடிப்புடுச்சி ரசிக்கர மனம் ஒரு வரம்.உங்க ரசிக தன்மைக்கு நீங்கதான் நிகர்.வாழ்த்துக்கள்.
"தூரன் குணா"நல்லா எழுதியிருந்தாரு.

cheena (சீனா) said...

ரசிகன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நான் ரசித்த கவிதை அது - கவிஞர் தன்னுடைய (பிறருடைய) இளமைக் காலத்தைப் பற்றி எழுதும் போது மனதின் இயல்புகள் வேறுபடுவதில்லை.

சில கவிஞர்கள் வெளிப்படையாக எழுதுவார்கள்.

தமிழ்நதி said...

இந்தக் கவிதையை நானும் வாசித்தேன். மிக நன்றாக வந்திருந்தது. தூரன் குணா சிக்கனச் சொற்கட்டுக்குச் சொந்தக்காரர்.

cheena (சீனா) said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி - தமிழ்நதி

Unknown said...

உங்கள் மின்னஞ்சல் இல்லாததால் இங்கே.

தூரன் குணாவின் முகவரி கிடைக்குமா? தில்லியில் இருந்து வெளிவரும் வடக்கு வாசல் இதழுக்கு எழுதக் கேட்கலாம்.

வடக்கு வாசல் இணையத்திலும் கிடைக்கிறது.

http:/www.vadakkukvaasal.com

நீங்களும் படித்து விட்டு இங்கே உங்கள் கருத்துக்களை எழுதலாமே.

ராகவன் தம்பி

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

தூரன் குணாவின் முகவரி இல்லையே