Monday, February 18, 2008

பேசும் யானை

அன்புடன் குழுமத்தில், அன்பர் புகாரி அறிமுகப் படுத்திய, தமிழோவியத்தில் பிரசுரமான, ஜான்.பீ.பெனடிக்ட்டின் கவிதை ஒன்று இங்கே :
------------------------------------------------------------------------------------------
பெரிசா எங்களைப் படைச்சதால
பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான்
பேச முடியா ஊன ஜாதியை
பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்

முழங் கையளவு குச்சியை வைச்சு
முட்டிக்கு முட்டி தட்டுறிய
மூனு மாசத்துக் கொருமுறை தான்
முதுகில தண்ணீ ஊத்துறிய

கால் நகர முடியாம
கட்டிப் போட்டு வாட்டுறிய
கட்டுக்கட்டா கரும்பு திங்கும்

கம்பீரக் கூட்டம் நாங்க
காய்ஞ்சு போன தட்டையை
கால் வயிற்றுக்குப் போடுறிய

என்னைப் பெத்த மவராசி
எந்தக் கோயில் வாசலிலோ
என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க

வருஷத்துல ஒருமாசம் முதுமலை கேம்ப்
வாஸ்து பொலிட்டிசியன் போட்ட பிச்சை
வருஷம் முழுக்க காட்டுக்குள்ளே கூட்டமா
வாழ்வது தானே எங்க ஜனத்தின் ஆசை

வாய் பேச முடிஞ்சதால
வந்தேன் ஜார்ஜ் கோட்டைக்கு
வனத்துறை மந்திரியைப் பாத்து
வயிற்றெரிச்சலைக் கொட்டிப் போட
--------------------------------------------
நன்றி: தமிழோவியம்
நன்றி : அன்புடன் புகாரி

நன்றி : ஜான்.பீ.பெனடிக்ட்

37 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

துளசி கோபால் said...

நம்மூட்டு யானைங்களுக்கு இந்தப் பாட்டைப் படிச்சுக் காமிச்சேன்.

அதுங்க அழுத அழுகையை என்னன்னு சொல்றது?

ப்ச்...........(-:

cheena (சீனா) said...

துளசி, வருகைக்கு நன்றி

உங்க வூட்டு ஆனைங்கல்லாம் அழவுதுங்களா - ம்ம்ம் - எனக்கும் அழுவாச்சியா வருது -

சதங்கா (Sathanga) said...

நல்லா ரைமிங்காக ஆரம்பிச்சு நடுவில் கொஞ்சம் விலகியது போல இருக்கிறது. இது என்னோட எண்ணம். மற்றபடி யானையப் பற்றி சிந்தித்து எழுதியது பாராட்டத்தக்கது.

காட்டாறு said...

அருமையான கவிதை. கலங்க வைக்கும் நிதர்சனம். :-(

நிலா said...

தாத்தா, இத படிச்ச பின்னாடி கோவில்ல யானைய பாத்தா பாவமாத்தான் கண்ணுக்கு தெரியும் :(

நிலா said...

தாத்தா, இத படிச்ச பின்னாடி கோவில்ல யானைய பாத்தா பாவமாத்தான் கண்ணுக்கு தெரியும் :(

பாச மலர் / Paasa Malar said...

நம்ம கிட்ட படுற‌ பாட்டை இப்படி விலங்குகளெல்லாம் பேச ஆரம்பித்தால்..அவ்வளவுதான்..

cheena (சீனா) said...

சதங்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காட்டாறு

cheena (சீனா) said...

நிலாக்கண்ணு - யானை பாவம் தான் - ஆனா அதெப் பாத்துப் பயப்படக்கூடாது - பாவப்படக்கூடாது - தைரியமா அது கிட்ட கத்துக்கணும்

cheena (சீனா) said...

விலங்குகள் பேச ஆரம்பித்தால் நமது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்

Agathiyan John Benedict said...

எனது இந்தக் கவிதையை ஏகப்பட்டோரிடம் எடுத்துச் சென்று பிரபலப்படுத்திய 'தமிழ்க் காதலர்' கவிஞர் புகாரி, சீனா ஆகியோருக்கும் ஆர்வமாய் படித்துப் பாராட்டிய நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி பெனெடிக்ட்

துளசி கோபால் said...

பெனடிக்ட், இது உங்க கவிதையா?

கவிதைன்னால்லே காதா தூரம் ஓடும் நான், யானைன்னதும் என்னன்னு பார்க்க வந்தேன்.

சில இடத்துலே ரைமிங் கொஞ்சம் மிஸ்ஸிங் போல இருக்கே.....

பிச்சை & ஆசைக்குப் பதிலா பிச்சை & இச்சைன்னு இருக்கலாமோ?

கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றேன்னு நினைக்க்காதீங்க. ச்சும்மா மனசுலே தோணுச்சு.

எம்மாம் பெரிய மிருகம். இப்படி மனுசன் அதை அடிமையாக்கிப் பிச்சை எடுக்கவச்சுட்டானேன்னு நானும் புலம்பவதுண்டு.

இப்படிக்கு,
ஒரு யானைப்ரேமி

cheena (சீனா) said...

வாங்க துளசி, கட்டுன வூட்டுக்கு பழுது சொல்றது தப்பே இல்லீங்க - அது அடுத்த வூடு கட்டும் போது உபயோகமா இருக்குமில்லே

Agathiyan John Benedict said...

// பெனடிக்ட், இது உங்க கவிதையா? //
ஆமாம் துளசி! ரொம்ப ஆச்சரியமா இருக்குதில்ல...???? -:))))))

// சில இடத்துலே ரைமிங் கொஞ்சம் மிஸ்ஸிங் போல இருக்கே..... //
உண்மைதான். வலையேற்றுமுன் ஒருசில வரிகளைச் சேர்த்தேன். அந்த இடைச்செருகல் சற்று சரியில்லாமல் போய்விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.

// பிச்சை & ஆசைக்குப் பதிலா பிச்சை & இச்சைன்னு இருக்கலாமோ? //
பிச்சைக்கு இச்சை என்பது நல்ல பொருத்தமாகவே தெரிகிறது எனக்கு(ம்).

// கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றேன்னு நினைக்க்காதீங்க. ச்சும்மா மனசுலே தோணுச்சு. //
செதுக்கினால் தான் கல் சிலையாகும். அதுபோல் நீங்களெல்லாம் திருத்தினால்தான் என்னைப் போன்றவர்களின் கவிதைகள் "வாசிக்கக் கூடிய அளவுக்காவது" இருக்கும் -:)

cheena (சீனா) said...

பெனெடிக்ட் நன்றி

cheena (சீனா) said...

நானானி, பேசுகிறேன் தங்களுடன்

அன்புடன் சீனா

ரசிகன் said...

அருமையான தேர்வு இந்த கவிதை..
சீனா சார்.. ரொம்ப நாள் எடுத்துக்கிட்டிங்களே?..

இனி அடிக்கடி பதிவு போடுங்களேன்:)

cheena (சீனா) said...

ரசிகன்,

தற்சமயம் "அன்புடன்" குழுமத்தில் மறு மொழி இட்டு வருகிறேன். அதனாலும், பணிச்சுமையினாலும், இங்கு கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சீனா!
துளசியக்கா போல் நானும் கவிதை எனில் ஓடும் ரகம்.
ஆனால் இது பிரமாதம்.
அத்துடன் வரிக்கு வரி நடை முறை
உண்மை.
//என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே//

//சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க//
நிச்சயம் பேசுமானால் யானை இப்படித்தான் கூறும்.
பாராட்டுக்கள்.
அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

cheena (சீனா) said...

படித்து ரசித்து மறுமொழி இட்டமைக்கு நன்றி யோகன்

கோகுலன் said...

நல்ல பாடல்..

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க--

சரின்னு தான் படுதுங்க இந்த வரிகள்..

cheena (சீனா) said...

கோகுலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - கோகுலன்

ராமலக்ஷ்மி said...

தன் வலிமை புரியாத வன விலங்குகள்!
தன் ஆறாவது அறிவென்ற ஒரே ஆயுதத்தால் அவற்றைப் பாடாய் படுத்தும் மனிதர்கள்!

குசும்பன் said...

நல்ல கவிதை

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி - ஆறாவது அறிவு இல்லை எனில் இம்மாபெரும் மிருகத்தை அடக்கி ஆள முடியுமா ??

cheena (சீனா) said...

குசும்வன் - நல்ல கவிதை எனவே தான் இங்கே இடம்

நானானி said...

நெனச்சேன்! துள்சி ஆனைன்னதும் ஓடி வந்துருவாங்கன்னு. கையில் கரும்பு, வெல்லம், வாழைப்பழம், அரிசி ஏது கொண்டு வரலையா?
நல்ல கவிதை...இப்படிப் புலம்பும்
யானை ஒரு நாள் மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை சில வருடங்கள் முன்பு டிவியில் பார்த்தோமில்லயா?

அகரம் அமுதா said...

அட! அட! யானைக் கவிதையைப் படித்து விழுந்து விழுந்துச் சிரித்தேன்.

cheena (சீனா) said...

நானானி

துளசின்னாலே யானை தானே நினைவிற்கு வருகிறது யானைக்காக எல்லாம் கொண்டு வந்தாஹ.

மதம் எல்லாம் ஆனைக்குப் பிடிக்காது - அதுக்கு அதெல்லாம் கிடையாது - ஆமா

cheena (சீனா) said...

நன்றி அகரம் அமுதா - வருகைக்கும் சிரிப்புக்கும்

கோவை விஜய் said...

அருமையான கவிதை வரிகள்
யானகள்
பேசினால்
இப்படித்தான்
இருக்குமோ!
தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய்

tamilraja said...

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க
//
/
/ சமீப நாட்களில் படித்த அற்புதமான கவிதை யானையை முன் வைத்து சமூகத்திம் அவலங்களை தொட்டுச்சென்றது super!

படித்து பதிந்து எங்களையும் படித்து மகிழ வைத்த உங்களுக்கு நன்றி!
தமிழ்ராஜா

cheena (சீனா) said...

வருகிஅக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் ராஜா